12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா அஸாம் மாநிலத்தின் குவாட்டியில் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது.
இதில் பங்கேற்கும் இலங்கை குழாத்தின் ஒரு பிரிவினர் இன்று இந்தியாவிற்கு செல்லவுள்ளனர்.
1984 ஆம் ஆண்டு ஆரம்பமான தெற்காசிய விளையாட்டு விழா, இறுதியாக 2010 ஆம் ஆண்டு பங்களாதேஷ் டாக்காவில் நடைபெற்றது.
இம்முறை நடைபெறும் விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தி 467 வீர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

