
தைனான்:
தைவான் நாட்டின் தெற்கு பகுதியில் இ்ன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 என்ற அளவில் பதிவாகியிருந்தது. இச்சம்பவத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் பலியாகி உள்ளதாக முதல் கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 154 பேர்களுக்கும் மேல் படுகாயம் அடைந்துள்ளனர். அதிகாலைநேரத்தில் மக்கள் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கி இருப்பவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1999-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்க சம்பவத்தில் சுமார் 2 ஆயிரத்து 300 பேர் வரையில் பலியாயினர்.
