காணாமற்போயிருந்த 5 மீனவர்களின் சடலங்கள் வலையில்




காணாமற்போயிருந்த 5 மீனவர்களின் சடலங்கள் வலையில் சிக்கியதாக கடற்படை பேச்சாளர் தெரிவிப்பு
ஆழ்கடலில் ட்ரோலர் படகொன்றும் கப்பலொன்றும் மோதியதில் காணாமற்போயிருந்த மீனவர்கள் ஐவரின் சடலங்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மீனவர்களின் சடலங்கள் வலையில் சிக்கியதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

கடந்த 28 ஆம் திகதி ஹிக்கடுவை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்றிருந்த மீனவர் படகொன்று நேற்றைய தினம் (01) கப்பலொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த படகில் 6 மீனவர்கள் இருந்துள்ளதுடன், அவர்களுள் ஒருவர் காப்பாற்றப்பட்டிருந்தார்.

ஹிக்கடுவை மற்றும் தொடங்துவ பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களே காணாமற்போயிருந்தனர்.