ரணில் பொன்சேகா புரிந்துணர்வு உடன்படிக்கை



முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்டிக்கை ஒன்றை கைச்சாத்திடவுள்ளார்.
எதிர்வரும் 3ம் திகதி இந்த விசேட புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
சரத் பொன்சேகாவின் ஜனநயாகக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொள்வது குறித்த உடன்படிக்கை வரும் புதன்கிழமை பிற்பகல் சுப நேரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது.
சரத் பொன்சேகாவின் பிரத்தியேக செயலாளர் சேனக சில்வாவின் அபே ஜாதிக பெரமுன கட்சியும் இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கொள்ளவுள்ளது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.
காலம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்காக சரத் பொன்சேகா நியமிக்கப்பட உள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர், சரத் பொன்சேகா சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களான ராஜித சேனாரட்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு பிரதமரிடம் கோரியதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.