அக்கரபத்தனை பிரதேச நலன் கருதி நடமாடும் சேவை





அக்கரபத்தனை பிரதேச மக்களின் நலன் கருதி நடமாடும் சேவை ஒன்று அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தசிறி தலைமையில் பசுமலை வல்லவன் மண்டபத்தில்  29.02.2016 அன்று நடைபெற்றது.

இப்பகுதியில் வாழும் மக்களின் முக்கிய ஆவணங்களான பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கபட்டது.

அத்தோடு நடமாடும் சேவையின் மூலம் 300 இற்கு மேற்பட்ட கண்பார்வையற்றவர்களுக்கு  கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டது.

இச்சேவையின் மூலம் 1000 இற்கு மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்.

மக்களின் பிரச்சனைகளை  நிவர்த்தி செய்யும் பொருட்டு அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்துக்கொண்டமை குறிப்பிடதக்கது.