நாவிதன்வெளிக் கோட்ட விளையாட்டுப்போட்டிஇன்று !



இன்று நாவிதன்வெளிக்கோட்ட விளையாட்டுப்போட்டி!
காரைதீவு  நிருபர்

சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளிக்கோட்ட வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப்போட்டிகள்  இன்று 1ஆம் திகதி 15ஆம் கிராமம் திருவானூர் விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் ஆரம்பமாகிறது.
போட்டிகள் நாளை 2ஆம் திகதியும் தொடர்ந்து நடைபெறுமெனவும் இதில்கோட்டத்திலுள்ள 22 பாடசாலைகளும் கலந்துகொள்ளுமெனவும் நாவிதன்வெளிக்கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து தெரிவித்தார்.
தமிழ்மொழித்தினம்போட்டி 4இல்..
இதேவேளை நாவிதன்வெளிக்கோட்ட அகிலஇலங்கை தமிழ்மொழித்தினப் போட்டிகளில் எழுத்தாக்கம் தவிர்ந்த ஏனைய போட்டிகள்  எதிர்வரும் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
எழுத்தாக்கப்போட்டிகள் யாவும் கடந்த 27ஆம் திகதி சனிக்கிழமை வீரத்திடல் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றுமுடிந்துள்ளதாக நாவிதன்வெளிக்கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து தெரிவித்தார்.