நிந்தவூரில் புகைத்தலுக்கு எதிராகத் திரண்ட வர்த்தகர்கள்.



(சுலைமான் றாபி)

புகைத்தலற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பன இணைந்து ஜம்யிய்யதுல் உலமா சபை நிந்தவூர் கிளையின் அனுசரணையுடன் புகைத்தலுக்கான விற்பனையையையும், நுகர்வினைவும் கட்டுப்படுத்தும் பிரதான செயதிட்ட நிகழ்வு நேற்றைய தினம் (26) நிந்தவூர் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் உலமா சபையின் நிந்தவூர் கிளைத்தலைவர் மௌலவி எம்.ஐ. ஜௌபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமது ஆர்.யு. அப்துல் ஜலீல், முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் இசட்.எம். நதீர், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எ. தஸ்லீமா, கிராம சேவை உத்தியோகத்தர்கள்  உள்ளிட்ட நிந்தவூர் பிரதேச வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.


இதேவேளை வர்த்தக நிலையங்களில் புகைத்தல் பாவனைகளை மற்றும் எதிர்காலத்தில் நுகர்வினை கட்டுப்படுத்தவும்   அதற்கான   முறையான  செயற்திட்டங்கள்  என்பன  விளக்கமளிக்கப்பட்டதோடு, புகைத்தல் மூலம் சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் பல்வேறு தீங்குகள்  பற்றியும் இங்கு  விளக்கமளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.