யாழ். நாக விகாரைக்குச் சென்று சி.வி.வழிபாடு



சிங்கள ஆட்சியாளர்கள் ஒரு அடி பாய்ந்தால் தமிழர்கள் 10 அடி பாய்வதற்கு தயாராக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடியமை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதற்தடவையாக யாழ். நாக விகாரைக்குச் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார். தமிழில் தேசிய கீதம் பாடியமை என்பது ஒரு சிறிய விடயமானாலும், சிங்கள பௌத்த மக்கள் தங்களை ஏற்றுக் கொண்டு இன ஐக்கியத்தை விரும்பியுள்ளதையே இது எடுத்துக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.