சம்பூர் அனல்மின் நிலைய அனுமதி மனித உரிமைகளை மீறுவதாக புகார்
'சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அனுமதி சம்பூர் மக்களின் மனித உரிமைகளை மீறும் செயல்'
இலங்கையின் கிழக்கே திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் இந்திய உதவியுடன் அமையவுள்ள அனல் மின் நிலையத்திற்கு சூழல் பாதுகாப்பு அதிகாரசபை அனுமதி அளித்திருப்பது அந்தப் பகுதியிலுள்ள மக்களின் மனித உரிமைகளை மீறும் செயல் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
'கிழக்கு மக்களின் குரல்' என்ற அமைப்பு இன்று வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் ஆணையத்தில் நேரடியாக இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.
ஜனாதிபதியின் பொறுப்பிலுள்ள மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு, அதன் கீழ் செயற்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, காணி அமைச்சு, மின்சக்தி அமைச்சு ஆகியவற்றுக்கு எதிராகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக 'கிழக்கு மக்களின் குரல்' கூறுகின்றது.
யுத்த காலத்தில் சம்பூர் பிரதேசத்திலிருந்து வெளியேறிய குடும்பங்களின் காணிகளும் வாழ்விடங்களும் முன்னைய அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டதன் காரணமாக அவர்களால் அங்கு மீளக் குடியேற முடியவில்லை.
தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்தக் குடும்பங்களுக்கான மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் குடும்பங்களும் மீளக்குடியேறி வருகின்றன.
மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசமாக சம்பூர் விளங்கிய காலப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே தற்போது அனல்மின் நிலையதத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா கூறுகின்றார்.
தற்போது மக்கள் மீளக்குடியேறியுள்ள நிலையில் அந்த அறிக்கையானது பொருத்தமற்றாதாகவே கருதப்பட வேண்டும். இதனை கருத்தில் கொள்ளாமல் அனுமதி வழங்கப்படுமானால் அம்மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகவே அது அமையும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கை - இந்தியா இடையே 6 வருடங்களுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட ஓப்பந்தமொன்றின் படி சம்பூர் பகுதியில் 508 ஏக்கர் நிலம் அடையாளமிடப்பட்டு பாதுகாப்பு எல்லை வேலிகளும் போடப்பட்டுள்ளன.
அனல் மின் நிலையத்திற்கு அந்த பிரதேச மக்கள் தமது எதிர்பார்ப்புகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது அங்கு மீளக் குடியேறி தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், குடியிருக்கக் கூட முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படலாம் என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளரான சட்டத்தரணி சித்திரவேல் குலேந்திரன்