விமானப்படையின் கூட்டுப்படை புதிய தளபதி




இலங்கை விமானப்படையின் புதிய கூட்டுப்படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சி.ஆர்.குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் விமானப்படைக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர் இதற்கு முன்னர், வவுனியா விமானப்படை முகாமில் அதிகாரியாகவும், இரத்மலான மற்றும் கட்டுநாயக்க முகாம்களில் பிரதான அதிகாரியாகவும், வடக்கு விமானப்படை கட்டளைத் தளபதியாகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.