“நுவரெலியாவில் தீ “




(க.கிஷாந்தன்)

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பழைய கடை வீதியில் உள்ள கடைத் தொகுதியில் (28.02.2016) அன்று மதியம் 2.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் சேதமாகியது.

அதில் பத்திரிகை கடை ஒன்று முற்று முழுதாகவும் அதற்கு அருகில் உள்ள இரண்டு கடைகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.

இத்தீயை நுவரெலியா மாநகர சபை தீயணைக்கும் படையினரும், நுவரெலியா பொலிஸாரும் நுவரெலியா சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினரும், பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இத் தீ விபத்திற்கான காரணத்தை நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்