காயமடைந்தவர் உயிரிழப்பு



வீரகெட்டிய, கிரிமெட்டியான பிரதேசததில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றவர் தங்கல்ல, பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றார் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
வீரக்கெட்டிய, கிரிமெட்டியான நைகல விஹாரைக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.