நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதற்கட்ட மின் உற்பத்தி நடவடிக்கைகள் இன்று (28) நள்ளிரவு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மின் உற்பத்தி நடவடிக்கைகளை எதிர்வரும் புதன்கிழமையளவில் மீண்டும் செயற்படுத்த முடியும் என, இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் கடந்த வியாழக்கிழமை நிறுத்தப்பட்டன.
பொல்பிடிய மற்றும் கொலன்னாவ பவர் டிரான்ஸ்மிஷன் அமைப்பில் மின்னல் தாக்கியமையால் மின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.
இலங்கை மின் தேவைகளில் 45 வீதமானவை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்தே பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறு மக்களிடம் மின்சார சபை கோரிக்கை விடுத்தது.
இதேவேளை, புனர்நிர்மாணப் பணிகளின் பின்னர் இன்று நள்ளிரவு முதல் 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.