எங்களுக்கு பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தேவையில்லை. எங்கள் நிலம்தான் எமக்கு வேண்டும். இந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் ஒருபோதும் மாறப் போவதில்லை. இதுவே மயிலிட்டி மக்களின் ஏகோபித்த முடிவு. இவ்வாறு நேற்று இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விமான நிலையமா? துறைமுக அபிவிருத்தியா? எது தேவை என்பதை வலி.வடக்கு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இதற்கான கருத்துக் கணிப்பாகவே மேற்படி கூட்டம் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

