ஒப்பந்தத்தில் கையழுத்திட்ட பொன்சேகா - ரணில்



ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து எதிர்வரும் காலங்களில் செயற்படுவது தொடர்பிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சற்று முன்னர் அலரி மாளிகையில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.