இரத்தினபுரி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விளக்க மறியலில்



இரத்தினபுரி உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இருந்த டீ.டப்ளியூ.சி.தர்மரத்ன எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எம்பிலிபிடிய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விருந்து நிகழ்வொன்றின் போது, பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில், இந்தநிலையில் நேற்று வாக்குமூலம் அளிக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட தர்மரத்ன பின்னர் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.