(க.கிஷாந்தன்)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயற்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள டெவோன் வனப்பகுதியில் 03.02.2016 அன்று திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 10 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
03.02.2016 அன்று மதியம் 2 மணியளவில் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவல் ஏற்பட்டுள்ள பகுதியில் இயற்கை நீர்வீழ்ச்சியான டெவோன் நீர்வீழ்ச்சி காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
திம்புள்ள பத்தனை பொலிஸாரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

