"இராக்கின் குர்த் பிராந்தியம் தனிநாடாவது தொடர்பில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு வேண்டும்"



"இராக்கின் குர்த் பிராந்தியம் தனிநாடாவது தொடர்பில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு வேண்டும்"

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
Image copyrightAP
சுயாதீன அதிகாரங்களையுடைய இராக்கின் குர்த் பிராந்தியம் தனிநாடாவது தொடர்பில், முடிவை செயல்படுத்துவது கட்டாயமில்லை என்ற விதத்திலான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என அப்பிராந்தியத்தின் அதிபர் கூறியுள்ளார்.
குர்த் மக்கள் தங்களது எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பதற்கான தருணம் வந்துவிட்டது என்று மஸ்ஸூத் பர்ஸானி கூறினார்.
இதற்கு முன்பாகவேகூட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு வேண்டும் என பர்ஸானி கூறியிருக்கிறார். ஆனால் வாக்கெடுப்புக்கான கால அட்டவணை பற்றி அவர் பேசியதில்லை.
அண்மைய ஆண்டுகளில் பாக்தாத்தில் உள்ள அரசாங்கத்திடம் இருந்து கூடுதலான சுயாட்சி அதிகாரங்களை இராக்கின் குர்து மக்கள் பெற்று வந்துள்ளனர்.
குறிப்பாக இராக்கில் பெரிய பெரிய நிலப்பரப்புகளை ஐ எஸ் ஆயுததாரிகள் கைப்பற்றி வந்த நிலையில், குர்த்துக்களின் சுயாட்சி அதிகாரங்கள் கூடிவந்துள்ளன.
ஆனால் வரலாற்று ரீதியாகவே குர்த்துக்களின் தனிநாடு வேட்கையை சுற்றியுள்ள நாடுகள் எதிர்த்து வந்துள்ளன.