பாரிய நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு தேவையில்லையென்று கூறுபவர்கள் மிக விரைவில் அதனைச் சந்திக்கவுள்ளவர்களே என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும், மஹிந்த ஆதரவு குழுவினரும் FCID ஐ நீக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்து வருவது குறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவரிடம் வினவியபோதே இவ்வாறு பதிலளித்தார்.
யோசித்த ராஜபக்ஷவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல. பொதுமக்களின் நிதியை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் நீதிமன்றம் சரியான முடிவை எடுக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

