இந்திய மீனவர்கள் 44 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்



இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 44 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு நேற்று மன்னார் நீதவான் ஏ.கே. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.