மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கம்




முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 50 இராணுவத்தினர் மீண்டும் இராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக மஹிந்த தரப்பு செய்திகள் தெரிவிகின்றன.
இராணுவத்தினருக்கு பதிலாக பொலிஸ் பாதுகாப்புக் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேர்த்தனஇ பாதுகாப்பு சபையினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்இ மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமல்ல ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைத்து முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்கும் பொலிஸாரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.