காத்தான்குடி சிறுமியைக் குரூரமான முறையில் தாக்கியவர்களுக்கு பிணை வழங்கக் கோரி இன்று மட்டக்களப்பு மன்றில் விண்ணப்பம் குறித் சந்தேக நபர்கள் ஆஜரான போது அவர்களின் சார்பில் முன்வைக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் இருவரும் 42 நாட்கள் வரையில் விளக்க மறியலில் வைக்கபட்டுள்ளதாகவும், குறித்த சிறுமியின் உடல் தேகாரோக்கிய நிலையில் இருப்பதனையும் கனம் மன்றானது கருத்தில் கொள்வதுடன், விசாரணை முடிவடைந்துள்ளதால் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் எனவும், முதலாம், இரண்டாம் சந்தேக நார் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணிகள், அமீன், கண்ணண் ஆகியோர் மன்றின் முன் சமர்ப்பணம் செய்தனர்.
முறைப்பாட்டாளரின் நலன் கருதி ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத், பாதிக்கப்பட்ட சிறுமியை விசேட வைத்தியரிடம் காட்ட வேண்டிய தேவை உண்டு என்றும் பிணையில் விடுவது சமாதானக் குலைவை ஏற்படுத்தும் என்றும் தனது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டார்.
இருபக்க சமா்ப்பணத்தையும் ஏற்றுக் கொண்ட மட்டக்களப்பு நீதிபதி கௌரவ கணேசராஜா, தொடர்பான கட்டளையினை மே மாதம் 2ம் திகதி வழங்குவதாகக் தெரிவித்தார்.
இவ் வழக்கினைப் பார்வையிட பலரும் மட்டக்களப்பு மன்றுக்கு இன்று வருகை தந்திருந்தனர்.

