காங்கேசன்துறை தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்



காங்கேசன்துறை தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் , பரந்தன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை ஆகியவற்றை மீண்டும் இயங்கவைப்பது தொடர்பிலும் அமைச்சர் இங்கு கருத்து வெளியிட்டார்..