உத்தேச அரசியலமைப்பு யாப்பில் இலங்கை முஸ்லிம் மக்களின் உரிமைகள் உள்ளடக்கப்படுவதற்காக இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் (ஐ.ஓ.சி.) உதவியை முஸ்லிம் அமைச்சர் ஒருவர் கோரியுள்ளதாகவும் இதற்கு முன்னர் இந்த நாட்டின் அரசியல் விவகாரங்களில் முஸ்லிம் நாடுகள் அமைப்பின் தொடர்புகள் இருக்க வில்லையெனவும் இன்றைய சிங்கள தேசிய நாளிதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

