மஹிந்த நாடு திரும்பினார்



தாய்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (26) நள்ளிரவில் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
தாய்லாந்தின் சில பௌத்த மதஸ்தானங்களில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்துக்கு விஜயம் செய்ததாக அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
தாய்லாந்து விஜயத்தின் போது உக்ரேய்ன் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட உதயங்கவையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.