ஸ்ரீ ல.சு.க. மே தினத்துக்கு சென்றால் ஒழுக்காறு விசாரணை- பந்துல



நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  மே தினக் கூட்டத்துக்கு சென்றால், எனது வாக்காளர்கள் அடுத்த தேர்தலின் போது என்மீது ஓழுக்காற்று நடவடிக்கை எடுத்து, என்னைப் புறக்கணிப்பார்கள் என முன்னாள் அமைச்சரும் கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு வருமாறு அழைப்புக் கடிதம் கிடைத்துள்ளது. இதில், எனது தொகுதியிலிருந்து 750 பேரை கூட்டத்துக்கு அழைத்து வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எனது தொகுதியிலிருந்து யாரும் ஸ்ரீ ல.சு.க.யின் கூட்டத்துக்கு செல்ல தயாரில்லை. அப்படியிருக்கையில் நான் எப்படி அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது எனவும் அவர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.