ஸ்ரீ ல.சு.க.யில் செயற்படாத அமைப்பாளர்கள் நீக்கம்



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காக தியாகத்துடன் பணியாற்றும் தொகுதி அமைப்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இதற்காக, முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன, அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியார் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
அதாவுத செனவிரத்ன, ஜகத் புஷ்பகுமார் ஆகியோரும் இக்குழுவில் உறுப்பினர்களாகவுள்ளதாகவும் கட்சி குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றுக்காக நியமிக்கப்பட்ட அமைப்பாளர்கள் கட்சியின் ஒன்றுமைக்கு பாங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அத்துடன், கட்சியின் இலக்கு நோக்கிய பணிக்காக சில அமைப்பாளர்கள் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதுள்ளனர். இதனாலேயே புதிய அமைப்பாளர்களை நியமிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.