நம்பலாமா ஜப்பானியக் கார்களை?




தங்களின் கார்களின் வாயு வெளியேற்ற புள்ளிவிபரங்களில் மோசடி செய்வதற்கு பயன்பட்ட சோதனை பொறிமுறை 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்துள்ளதாக ஜப்பானிய கார் நிறுவனமான மிட்சுபிஷி ஒப்புக்கொண்டுள்ளது.
1991-ம் ஆண்டிலிருந்தே ஜப்பானின் உள்ளூர் சந்தையில் தங்களின் சில கார் வகைகளில் இந்த பொறிமுறை பயன்படுத்தப்பட்டுள்ளதாக மிட்சுபிஷி நிறுவனத்தின் தலைவர் டெட்சுரோ ஆய்க்காவா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தின் முழுமையான தகவல்களை அறிவதற்காக உள்ளக விசாரணை ஒன்று நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் இந்த சர்ச்சை வெடித்தது முதல், பங்குச் சந்தையில் மிட்சுபிஷி நிறுவனத்தின் மதிப்பில் அரைவாசி அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.