மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேசிய நீர் உயிரின கைத்தொழில் வலயம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தேசிய நீர் உயிரின கைத்தொழில் வலயத்தை கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
வாகரை பகுதியில் தேசிய நீர் உயிரின கைத்தொழில் வலயம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களினால் கடந்த மாதம் 18 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்த இளைஞர்கள் சிலர் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு இந்தத் திட்டத்திற்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பில் தீர்வு காணப்படவில்லையாயின் இந்தத் திட்டத்தினை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

