அண்மை நாட்களாக இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இலங்கையின் மத்திய மலைநாட்டின் கேகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டம் மண்சரிவால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன் 300க்கும் அதிகமானவர்கள் மண்சரிவுகளில் சிக்கி காணமல் போனோர் பட்டியலில் சேர்கப்பட்டுள்ளதுடன் 2 இற்கும் அதிகமான கிராமங்கள் முற்றாக மண்ணில் புதையுண்டுள்ளது.
இதேவேளை மலைநாட்டில் பெய்த மழை மற்றும் மேல்மாகாணத்தில் பெய்த அடைமழை காரணமாகவும் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததால் களனி கங்கையினை சுற்றியுள்ள கொழும்பின் புறநகர் பிரதேசங்கள் அனைத்தும் நீரால் முற்றாக மூழ்கியுள்ளன.
இதன் காரணமான அப்பிரதேசங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு உடைகள் போன்றவரை அரசாங்கமும் மக்கள் தன்னார்வ அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்கள் சமூக வலைத்தளங்களினூடாக ஒன்றிணைந்தும் முன்னெடுத்து வருகின்றார்கள்.
இதே வேளை இலங்கையின் வடக்குப் பகுதியில் பெய்த அடை மழை காரணமமாக கிளிநொச்சி மாவட்டம் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கிளிநொச்சி பகுதியில் 20 மேற்பட்ட கிராமங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதுடன் அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
தெற்கில் இடம்பெற்ற பாரிய அனர்த்தம் காரணமாக வடக்கில் இம்மக்களுக்கு நேர்ந்த அனர்த்தம் வெளிவராக காரணத்தால் இம்மக்கள் அதிகளவில் அடிப்படை சுகாதார பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ளார்கள். ஊடகங்களும் இம்மக்களை புறந்தள்ளி தெற்கின் அனர்ததையே தொடர்ச்சியா வெளியிட்டு வருவதன் காரணமாக முகப்புத்தக நண்பர்கள் பலர் ஒன்றிணைது பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு உதவுவதற்கு வந்துள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் யாரும் இந்த மக்களை எள்ளளவும் கணக்கில் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

