#மதினா: தற்கொலைக் குண்டு தாக்குதலில் 6 பேர் பலி



சௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. 
இதில்கு, குறைந்த பட்சம் 6 பாதுகாப்பு உத்தியோகத்தர் பலியாகியுள்ளனர்.ங7 பேர் வரை காயமுற்றுள்ளனர்.

முகமது நபியின் மசூதிக்கு (மஸ்ஜிதுன் நபவி) அருகே உள்ள பாதுகாப்புத் தலைமையகத்திற்கு வெகு அருகே தற்கொலை குண்டுதாரி ஒரு குண்டை வெடிக்கச் செய்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட வீடியோ படங்கள் அங்கிருந்து கரும்புகை எழுவதையும், ஒரு கார் எரிவதையும் காட்டுகின்றன.
புனிதம்இ வாய்ந்தநத இந்த  மசூதியில்தான் முகமது நபியின் (ஸல)அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது..
இந்த சம்பவம், கிழக்கு பகுதி நகரான கத்திஃப் நகரில் உள்ள ஒரு ஷியா மசூதிக்கு அருகே தற்கொலை குண்டு ஒன்று வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து வருகிறது.#Medina #SaudiArabiya