ரமித ரம்புக்வெல்ல கிரிக்கெட் அணிக்கு



முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்ல இங்கிலாந்துடன் நேற்று நடந்த 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டிருந்தார்.
அரசியல் தீர்மானம் ஒன்றே அவர் போட்டிக்கு அழைக்கப்பட்டதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியுடன் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இணைந்து கொண்ட ரமித ரம்புக்வெல்ல, அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை.
இந்த நிலையில், திடீரென அவர் நேற்று அணியில் விளையாட அழைக்கப்பட்டார்.
கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணியில் இணைந்து கொள்ள இணக்கம் தெரிவித்ததன் பலனாகவே ரமித போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டதாக கிரிக்கெட் துறையில் ஒரு வதந்தி பரவியது.
ரமி தேசிய போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தாத நிலையில், தேசிய அணியில் இணைத்து கொள்ளப்பட்டமை குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இதற்கு முன்னர் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹொட்டலில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பில் ரமித மற்றும் திக்ருவான் விதானகே ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டதுடன் விதானகேவுக்கு ஒரு வருட போட்டி தடை விதிக்கப்பட்டது.
ஆனால் ரமித விடுவிக்கப்படடது சிக்கலுக்குரியது என கூறப்படுகிறது.
மேலும் ரமித இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும் தெரிவுக்குழுவின் தலைவராக சனத் ஜயசூரியவே பணியாற்றினார். இது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.