வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா கிளப் ஆகிய ணிகளுக்காக விளையாடும் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு, 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இரண்டு மில்லியன் யூரோ அளவிலான அபராதமும் மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 முதல் 2009 - ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 4.1 மில்லியன் யூரோ அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து ஸ்பெயின் அரசாங்கத்தை ஏமாற்றியதாக அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸிக்கும் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
இருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
பெலிஸ் மற்றும் உருகுவே நாடுகளில் உள்ள வரி விலக்கு வசதிகளை பயன்படுத்தி பட உரிமைகள் மூலம் சம்பாதித்த மில்லியன் கணக்கான டாலர்களை பதுக்கியதாக, விசாரணையின் போது அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்