யானைக்கால் நோய் அற்ற இலங்கை



இலங்கையை யானைக்கால் நோய் அற்ற நாடாக பிரகடனம் செய்யும் நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆசிய வலயக் கண்காணிப்பகத்தால் இந்த சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனராத்ன குறிப்பிட்டுள்ளார்.
தென்கிழக்காசிய நாடுகளில் யானைக்கால் நோய் அற்ற நாடு என்ற ரீதியில் இலங்கை, இரண்டாவது இடத்தை பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே மாலைத்தீவு யானைக்கால் அற்ற நாடுகளில் முதலிடத்தில் காணப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டுக்குள் யானைக்கால் நோயை இல்லாதொழிக்கும் நோக்குடன் உலக சுகாதார ஸ்தாபனத்தால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய யானைக்கால் நோயை ஒரு வீதத்திற்கும் குறைவாக பேணுவதற்கு இலங்கை முன்னெடுத்த செயற்பாடுகளால் இந்த சான்றிதழ் வழங்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.