மூதூர் நகரில் ஒருவர் வெட்டிக்கொலை



மூதூர் – தோப்பூர் ஜின்னா நகரில் இன்று காலை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 6 மணியளவில் மதவழிபாட்டு தலமொன்றுக்குள் வைத்து இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் தப்பிச் சென்றதை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர், கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் தமது மைத்துனரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
முற்பகை காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர் 40 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேநபர்கள், நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.