நாட்டின் சமுக மாற்றத்துக்கு வித்திட்ட அரசியற் தலைமைகளில் ஒருவரான காலஞ் சென்ற பிரதமர் அமரர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 57 ஆவது நினைவு தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு நினைவு தின நிகழ்வுகள் ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதிக்கருகில் இடம் பெற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்து தேரர்கள் வைத்தியர்கள் ஆசிரியர்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து இந்நாட்டின் பொது மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு பாரிய சேவைகளைப் புரிந்த எஸ்.டபிள்யு. ஆர்.டி பண்டாரநாயக்க இந்நாட்டின் 04 வது பிரதமராக கடமையாற்றியிருந்தார்.
போக்குவரத்து, காப்புறுதி, சுகாதாரம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் சேவைகளை மக்கள் மயப்படுத்திய பெருமை அமரர் பண்டாரநாயக்கவையே சாரும்.
1959 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க மரணித்தார்.
அவரது 57 ஆவது நினைவு தின நிகழ்வுகள் இன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பண்டாரநாயக்க குடும்பத்தின் அங்கத்தவர்களது பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இதற்கிணைவாக இடம்பெற்றது.

