மட்டக்களப்பில், கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 3மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை



*மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தார்* மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ *பிரபாகரன்* .


கடந்த 2015 ஆம் ஆண்டு தை மாதம் 22ஆந் இடம் பெற்ற விவசாய காணி தொடர்பான பிணக்கின் காரணமாக நாகப்போடி மகேஸ்வரலிங்கம் என்பவரை கொலை செய்தார் என்ற அடிப்படையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து நபர்களுக்கு எதிராக கௌரவ சட்டமா அதிபர் அவர்களால் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வு பத்திரத்தை தாக்கல் செய்தார்.


அதில் இரண்டு சந்தேக நபர்கள் இறந்ததன் அடிப்படையில் மூன்று நபர்களுக்கு எதிராக வழக்கு நடவடிக்கை இடம்பெற்றது. 


கடந்த ஐந்து வருடங்கள் இடம் பெற்ற வழக்கில் வழங்கப்பட்ட சாட்சியாங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ *பிரபாகரன்* அவர்கள் 2026.02.20 ஆம் திகதியாகிய இன்று மூன்று எதிரிகளையும் குற்றம்வாளியாக கண்டு அதிமேன்மிகு ஜனாதிபதி குறிப்பிடுகின்ற தினத்தில் மரண த‌ண்டனையை நிறைவேற்றுவதற்கு சிபாரிசும் செய்துள்ளார். 


குறித்த வழக்கை கௌரவ சட்டமா அதிபர் சார்பாக *அரச சட்டத்தரணி எம். ஏ. எம். லாபீர்* அவர்கள் நெறிப்படுத்தியிருந்ததுடன், குற்றவாளிகள் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி பத்தினாதன் சுலோச்சன் ஆஜராகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.