பண்டாரவளை விபத்தில் பன்முக ஆளுமை பிரசாந்தி ஆசிரியர் உயிரிழப்பு





 சென் தோமஸ் கல்லூரியின்  ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி , நேற்று மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார்.

  

ஆசிரியர்  சண்முகவேல் பிரஷாந்தி,  கலை இலக்கிய ஆர்வமிக்க ஒருவராக திகழ்ந்தவராவர் . சிறந்த குரல் வளமிக்க பாடகியும் அனைத்து இசைகருவிகளையும் இசைக்கும் திறமையான  இசை ஞானம் கொண்டவர் இசையமைப்பில் அதீத ஆர்வத்தோடு புத்தாக்கமிக்கவராக புதிய படைப்புகளை உருவாக்க கூடியவர்,  



இந்திய முன்னணி இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், தீனா , ஆகியோரது பாராட்டையும் பெற்றவர் , 

அன்மையில்  நாட்டில் ஏற்பட்ட ' தித்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் நாட்டையும் மக்களையும் மீளெழுச்சி பெரும் நோக்கில்  தனது தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கிய "Rebuild Sri Lanka " எனும் ஆங்கிலம் ,சிங்களம் ,தமிழ் , என  மும்மொழியில் தானே பாடி இசையமைத்து பாடல் ஒன்றினை வெளியிட்டார்.


அதுபோல கடந்த காலங்களில் பல்வேறுபட்ட பாடல் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இவரது பாடல் தொகுப்பானது  சமூக ஊடகங்களிலும்  சமுக ஆர்வலர்கள் மற்றும் கலை உலகத்தினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடதக்கது. இதுபோன்று மேலும் எதிர்வரும் காலங்களில் பல்வேறுபட்ட பாடல் தொகுப்புகள் அடங்கிய அல்பம்களையும் வெளியீடு செய்வதற்கான ஆர்வத்தோடு தயாராகியிருந்தார்,



தீராத இசை ஆர்வமிக்க படைப்பாளியாகவும் ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்த செல்வி சண்முகவேல் பிரஷாந்தினியின் இழப்பு, மலையக கல்வி சமூகத்திற்கும் கலை உலகிற்கும் பெரும் பேரிழப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.


-தலவாக்கலை குணா-