வடக்கில் இராணுவ கேணல் உட்பட 6 படையினர் விளக்கமறியலில்...




வடக்கில் இரண்டு இளைஞர்களை காணாமல் போகச் செய்தமை தொடர்பில் இராணுவ கேணல் உள்ளிட்ட ஆறு இராணுவ உத்தியோகத்தர்களை விளக்க மறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு அச்சுவேலி பிரதேசத்தில் இரண்டு பேரைக் காணாமல் போகச் செய்த சம்பவத்திற்காக இராணுவ கேணல் உள்ளிட்ட ஆறு படையதிகாரிகள் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண நீதவான் எஸ்.சதீஸ்வரன் இந்த உத்தரவினை நேற்று பிறப்பித்துள்ளார்.
கேணல் யசஸ் வீரசிங்க உள்ளிட்டவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் கைதான இரண்டு நபர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நேற்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அழைப்பாணை ஊடாக இந்த சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.