போலி அடையாள அட்டைகளை தயாரித்து வங்கியில் பணம் பெற்ற 2 பெண்கள் கைது



போலி அடையாள அட்டைகளை தயாரித்து வங்கியில் பணம் பெற்ற 2 பெண்களும் மூன்று ஆண்களும் நீர்கொழும்பு விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க எவரிவத்தை பகுதியில் நேற்று மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பதுளை, முகத்துவாரம், தெஹிவளை, நுவரெலியா மற்றும் கந்தான ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு விசேட விசாரணை பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.