ஏறாவூர் படுகொலை: சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு



ஏறாவூர் – முகாந்திரம் வீதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், சந்தேகநபர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வசித்த தாய் நூர்முஹம்மது உஸைரா (வயது 56), அவரது மகள் ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.