அக்கரைப்பற்று மாணவர்கள் 13 பேருக்கு சகல பாடங்களிலும் A




(SUHAIB)
கடந்த வருடம் 2016 டிசம்பர் மாதத்தில் பாடசாலை மாணவர்களுக்கென இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட GCE (O/L) பரீட்சைப் பெறுபேறுகள் நாடு தழுவிய ரீதியில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறு பேறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த 04 பாடசாலைகளில் இருந்து 13 மாணவர்கள் சகல பாடங்களிலும் A சித்தி பெற்று அவர்கள் கற்ற பாடசாலைக்கும், அவர்களை கற்பித்த ஆசிரியர்களுக்கும்,  அவர்களின் பெற்றோர், பாதுகாவலர், உறவினர்களுக்கும், தனதூருக்கும் அவர்கள் கௌரவத்தினையும்
 சேர்த்துள்ளனர்.

இதில் சகல பாடங்களிலும் A சித்தி பெற்ற பாடசாலைகளின் விபரங்கள்.

1.Muslim Central College (N/S) -  05
2.Munawwara Junior College.   -  04
3.Ayesha Muslim Ladies College. 02
4.As-siraj Maha Vid.            02