மானா மக்கீனுக்கு நாடகக் கீா்த்தி விருது




(அஷ்ரப் ஏ சமத்)

மானா மக்கீனுக்கு  அரச நாடக விழாவின்போது  வாழ்நாள் விருது நேற்று (28) வழங்கப்பட்டது.  உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி கலாச்சார அமைச்சின் கலாச்சாரத் திணைக்களத்தினால்  இவ் ஆண்டின் அரச நாடக விழா நேற்று தாமரை உள்ளக அரங்கில்  நடைபெற்றது.  இந் நிகழ்வு பிரதியமைச்சா் பாலித்த தேவப்பெரும பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா்.   இந் நிகழ்வின்போது இலங்கை நடாகத்துறையில் மேடையிலும், வானொலியிலும் பத்திரிகைத் துறை 25க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியவருமான  கொழும்பைச் சோ்ந்த  மானா மக்கீனுக்கு நாடகக் கீா்த்தி விருது   வழங்கப்பட்டது.  
வாழ்நாளில் ஒருமுறை மட்டும் வழங்ப்படும்  விருதினை சிங்கள மொழி மூலம்  சிங்கள நடாகக் கலைஞா் நாமல் வீரமுனிவுக்கும் தமிழ் மொழி மூலம்மான விருது  மானா மக்கீனுக்கும் வழங்க்பட்டது. .இந்நிகழ்வில் கலாச்சார அமைச்சின் பணிப்பாளா், நாடக் கலைஞா்கள் பலரும் கலந்து சிறப்பித்தனா்.

அத்துடன்  இளம்கலைஞா்களான  எம் நவநீதன்  மெஜிக் பொக்ஸ் குருந் நாடகக் கலைஞா் எம் இந்திருஜா ஆகியோா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.