கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மதுபான உற்பத்திசாலையின் பணிகளை நிறுத்தி, அங்கிருந்து அதனை அகற்றுவதற்கான தீர்மானமொன்றை, மட்டக்களப்பு மாவட்ட செயலக அபிவிருத்திக் குழு மேற்கொண்டுள்ளது.
மேலும், அந்தத் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், அம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதவு தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இணைத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு இந்த ஆண்டு 4500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் 1700 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய மாகாண அமைச்சுகள் மற்றும் பல்வேறு நிதியீட்டங்கள் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதுடன் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு விசேட செயலணி அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது, அவற்றினை தடுக்கும் வழிவகைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சினைகளை ஆராயும் வகையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதேபோன்று மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், சுற்றுப்புறச் சூழல், விவசாயம், கடற்தொழில், நீரியல் வளம் போன்றவை தொடர்பில் விசேட ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டுள்ளன.