கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்!



கொழும்பில் பல பாகங்களில் எதிர்வரும் புதன்கிழமை 15 மணித்தியாலங்களுக்குநீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைஇன்று தெரிவித்துள்ளது.
புதன்கிழமை(29) காலை 9 மணிமுதல் இரவு வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைஅறிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கடுவலை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொடிகாவத்த, முல்லேரியா மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாழும் மக்கள்,முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்