நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கிடைத்த சட்ட ஆலோசனைகளின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு நேற்று அறிவித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.
இதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


Post a Comment
Post a Comment