யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 19 பேர் பலி





இந்தியாவின் வட பகுதியில் யமுனை ஆற்றில் வியாழக்கிழமை காலையில் அதிகமானோரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பேக்பாட் நகருக்கு அருகில் யமுனை ஆற்றில் மூழ்கிய இந்த படகில் 50க்கு அதிகமானோர் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இதுவரை 11 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பலரை காணவில்லை.
முதலில் கிடைத்துள்ள தகவலின்படி, இந்தப் படகு அதிக ஆட்களை ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், இந்த சம்பவம் நிகழ்ந்ததற்கான காரணங்கள் பற்றி அதிகாரிகள் இன்னும் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் படகு ஏற்றிச்செல்ல வேண்டியதைவிட இரண்டு மடங்கு மக்களை சுமந்து சென்றதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதை மேற்கோள்காட்டி 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், படகுகளில் பயணங்களின்போது, அதிகம் பேரை ஏற்றிச்செல்வதாலும், பாதுகாப்பு தரங்கள் குறைவாக இருப்பதாலும் விபத்துக்கள் பொதுவாக நடைபெறுகின்றன.