(க.கிஷாந்தன்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயங்பட்டுள்ளனர்.
அட்டன் நகரத்திலிருந்து மஸ்கெலியாவிற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி 23.09.2017 அன்று காலை மணிக்கு அட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் நோர்வூட் நிவ்வெளி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள் ளது.
முச்சக்கரவண்டியின் வேககட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் ஒருவர் அதி திவீர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment