இங்கிலாந்தில் கறுப்பபுப் பட்டியில் இணைக்கப்பட்ட சயிட்டம்



மாலபே சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை பிரித்தானிய வைத்திய சபை கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும், பிரேசில், உக்ரைன், லைபீரியா, இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளிலுள்ள சில கல்லூரிகளும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இவற்றில் 10வது இடம் சயிட்டம் நிறுவனத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 

இங்கிலாந்து வைத்திய சபையால் நடத்தப்படும் பீ.எல்.ஏ.பி பரீட்சைகளுக்கு, குறித்த கல்லூரிகளில் இருந்து வரும் மருத்துவ பட்டதாரிகள் தோற்ற முடியாது என்பதோடு, வைத்திய சபையால் மருத்துவர்களாக இவர்களை பதிவு செய்யவும் முடியாது என, தெரியப்படுத்தப்பட்டுள்ளது.