ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழா



சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்குரிய ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (14) நடைபெற்றது.
சர்வதேச அமைப்புகளும், சர்வதேச நிதி நிறுவனங்களும் நடுநிலையான வருமானம் பெறும் நாடென எம்மை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கு எமது பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுப்பது இன்றியமையாததென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார்.